Sunday, January 10, 2016

How Tamil Nadu Government Employees Worked Hard to Prevent Epidemics

From https://www.facebook.com/photo.php?fbid=10153918935764828&set=a.497812629827.278402.722399827&type=3 This post by @Karthikeyan TheRebel Sir has been widely shared << சென்னை மாநகரம் மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களிலும் கடலூர் மாவட்டத்திலும் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டபோது தேங்கியிருக்கும் நீரினால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் தொற்று நோய்களான வயிற்றுப்போக்கும் காலரா போன்ற நோய்களும் மேலும் பல காய்ச்சல்களும் நோய்களும் பல இலட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படலாம் என பல முகநூல் பதிவர்களும் சமூக ஆர்வலர்களும் அப்போது களத்தில் இறங்கிய பல்வேறு சமூக இயக்கங்களும் பதறியதும் பதிவிட்டதும் உண்மை தான். ஆனால் இன்று அப்படி ஒரு பெரும் உயிர் இழப்பும் நோய்களும் இப்படிப்பட்ட வெள்ளம் நிகழ்ந்தால் கூட ஏற்படவே இல்லை என்பதை நாம் யாவரும் அறிந்திருந்தால் கூட எப்படிப்பட்ட பேராபத்து தடுக்கப்பட்டிருக்கிறது என்பதை எத்தனை பேர் உணர்ந்து பதிவிட்டு இருக்கிறார்கள் என்றால் வெகு சிலரே. அரசு இயந்திரங்களின் சுணக்கமாய் கதறி பொறுமியவர்கள் இன்று எந்த ஒரு நோய் பேரழிவும் நடைபெறாது தடுத்த தமிழ்நாடு பொது சுகாதரம் மற்றும் நல்வாழ்வுத்துறையின் மருத்துவர்களும் மாவட்ட மாநில வாரியான இயக்குநர்களும் சுகாதரத்துறை ஊழியர்கள் யாவரும் எடுத்த முயற்சிகளும் ஆக்கங்களும் தயார்நிலையும் பற்றி எந்த ஊடகங்கள், சமூக வலைதள பதிவர்கள், ஆர்வலர்கள் மற்றும இயக்கங்கள் யாவும் சிறிதும் கூட பேசவில்லை என்பதில் எனக்கு சிறிதும் வியப்பு ஏதும் இல்லை. எப்படி கால்பந்நாட்ட விளையாட்டில் பல கோல்களை தடுக்கும் கோல் கீப்பரான முதன்மை தடுப்பாளர் தான் செய்த தவறுகளை மட்டுமே வைத்து பேசப்படுவார் என்பதை போல இந்த அரசு மருத்துவர்களும் சுகாதரத்துறை அமைச்சரும் அமைச்சரகமும் இயக்குநர்களும் அடிப்படை முதல் இடைநிலை சுகாதாரத்துறை ஊழியர்களும் நன்றிக்கும் பெருமைக்கும் உரியவர்களாய் பேசப்படுவதே இல்லை. இதை அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர்கள் பணியை அவர்கள் செய்து விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால், அடிப்படையில் மக்கள் நலம் மேல் அக்கறை கொண்ட ஒரு மருத்துவனாக இருப்பதால் இந்த தமிழக சுகாதாரத்துறையின் உச்சம் முதல் மருத்துவர்கள் முதல் இயக்குநர்கள் மற்றும் இடைநிலை மற்றும் கடைநிலை ஊழியர்கள் செய்த அளப்பரிய சேவையும் உழைப்பும் ஊடகங்காலும் ஆர்வலர்களாலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்தாலும்... ஒரு தமிழனாய்... ஒரு மக்கள் நலம் விரும்பும் சக மனிதனாய்... உங்கள் உழைப்பையும் தியாகத்தையும் அறிந்த மருத்துவனாய்... நன்றிகள் கோடி !!! >> -oOo- Few Clarifications for those who say that Prevention of Epidemics is Function of Government and Government Servants are paid for that alone and hence they do not need any special praises . . . . .. இது அரசின் கடமை என்று சொல்வது எளிது ஆனால் இங்கு இருக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை என்றும் பார்க்க வேண்டும் அவர்கள் செய்த வேலை எவ்வளவு என்றும் பார்க்க வேண்டும் மிக குறைவான ஊழியர்கள் மிக அதிக வேலையை பார்த்துள்ளார்கள் பலரும் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டு கூடுதல் நேரம் கொள்ளை நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டார்கள் -oOo- இந்த கொள்ளை நோய்க்கு என்று அரசு தனியாக காண்டிராக்ட் விட்டு, ஒரு 500 பேர் தனியாக பணம் வாங்கி இந்த வேலைகளை செய்யவில்லை -oOo- இங்கிலாந்து மருத்துவதுறையான NHSல் (National Health Services) வருடந்தோறும் 6.7 லட்சம் பிரசவங்கள் (சுகப்பிரசவங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள்) நடைபெறுகின்றன அங்கு இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சம் பிற பணியாளர்களின் எண்ணிக்கை 16 லட்சம் தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் வருடந்தோறும் 6.4 லட்சம் பிரசவங்கள் (சுகப்பிரசவங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள்) நடைபெறுகின்றன இங்கு இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 15000 பிற பணியாளர்களின் எண்ணிக்கை 80000 ஆக இங்கு மருத்துவமனையிலேயே ஓவ்வொரு பணியளாரும், மருத்துவர்ம் இங்கிலாந்தை போல் 15 மடங்கு வேலை செய்ய வேண்டியுள்ளது இந்த வேலைக்கு மேலே தான் அவர்கள் 3 வாரங்கள் தொற்று நோய் தடுப்பு பணிகளை செய்தது

No comments:

Post a Comment