Saturday, January 23, 2016

Polio

From January 16 at 8:01pm  January 16 at 5:27pm

Dominic Savio
No country for doctors.
Iam sure most of us had faced an unruly patient attender many times,but a mob very few of us had to face.there lies a soul who probably will lose his both kidneys. Why because he happened to attend a trauma patient in the middle of the night.People in this country think that doctors are well off,they swindle money, they're are greedy,they are roaming around with a knife to kill.Behind the glamour of being a doctor lies sleepless nights,stress, missed family functions, including daughters birthday party, anniversaries. Yet we continue to work.lot of us putour heart,mind and soul and some times work beyond our physical capacity to save the patient. We do not ask for your love but let us work in peace and without fear.

Pulse Polio 


போலியோவை ஒழித்து விட்டார்களே
நான் ஏன் என் குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்த பதிவு 
இது குறித்து கனவுப் பிரியன் என்பவர் தவறான பதிவு ஒன்றை எழுதியுள்ளார் 
<<
எழுத கூடாதுன்னு தான் நினச்சேன். நாளைக்கு என்னமோ போலியோ சொட்டு மருந்து நாளாமே...........ஏம்பா போலியோ ஒழிச்சாசுன்னு ஆதாரம் காட்டி நல்ல புள்ளன்னு பட்டம் ( சர்டிபிகேட் ) வாங்குன நல்லவைங்களா நீங்க நல்லா இருங்கடே.
>>
கனவுப்பிரியன் அவர்களே
"ஏம்பா போலியோ ஒழிச்சாசுன்னு ஆதாரம் காட்டி நல்ல புள்ளன்னு பட்டம் ( சர்டிபிகேட் ) வாங்குன " என்று யாரும் கூறவில்லை
India marks three years since last polio case
என்று தான் கூறியுள்ளார்கள்
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் wild polio virus மூலம் ஏற்படும் paralytic polio இல்லை என்று தான் கூறியுள்ளார்கள் 
இதை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன் 
<<
தூத்துக்குடியில சென். ஜோசப் லெப்ரசி மருத்துவமனை இருக்கு. 100 பேஷன்டுக்கு மேல இருந்தாங்க.
என்னோட கல்யாணத்துக்கு காலையில் 7 மணிக்கே லெப்ரசி மருத்துவமனை வேன் வந்து மண்டபம் எதிரே நிற்க வெளிர் காவி உடை அணிந்த சிஸ்டர்களாக திமு திமுவென இறங்கி மண்டபத்தில் நுழைய மாமனார் முதற்கொண்டு பலரும் பேந்த பேந்த முழித்தது தனி கதை. அத்தனை வேலை செய்திருந்தேன் அந்த மருத்துவமனைக்காக. ( எந்த அளவுக்கு நெருக்கம் என்று சொல்லத்தான் இந்த செய்தி )
>>
அது சரி சார்
அத்தனை வேலை செய்திருக்கிறீர்கள் அந்த மருத்துவமனைக்காக என்பதற்காக தப்பும் தவறுமாக எழுத உரிமை கிடையாது சார் 
<<
திடீர் என தமிழ் நாட்டை ஆண்ட நல்லவங்க தமிழகத்தில் தொழு நோயை ஒழித்து விட்டதாக அவர்கள் 5 வருட சாதனை என்று பட்டியல் இட அப்படியா ரொம்ப நல்லது மக்கா என்று ஆந்திராவை சார்ந்த சந்திரபாபு நாயுடு அரசு 40 கோடி தொழு நோய் ஒழிப்பு நிதியை மத்திய அரசிடம் இருந்து தனக்காக மாற்றி கொண்டது.
>>
அண்ணாச்சி
தொழுநோய் ஒழிக்கப்படவில்லை
கட்டுப்படுத்தப்பட்டது 
<<
அப்புறமா மருத்துவமனை நடத்த பட்ட கஷ்டம் இருக்கே. பக்கம் பக்கமா எழுதலாம். தூத்துக்குடி அதிகமான ரோமன் கத்தோலிக்க கிருஸ்துவர்களை கொண்ட ஊர் என்பதால் அப்படிப்பட்ட நண்பர்களாக தேடி தேடி சென்று மருத்துவமனையை பற்றி சொல்லி ( உள்ளே வரவே பயப்படுவார்கள்..அந்த அழுகும் உடல் வீச்சம் கண்டு ) கேன்வாஸ் செய்தது இந்த போலியோ ஒழித்ததாக வந்த செய்தி படித்ததும் நினைவில் ஓடியது.
>>
இப்ப என்ன வேண்டும் உங்களுக்கு ?
நிதி வேண்டும் என்பதற்காக நோய் இருப்பதாக கூற வேண்டுமா
<<
இப்போ உலக அளவில் " யூனிசெப் " போன்ற அமைப்புகள் அப்படியா ரொம்ப நல்லது தம்பி வீட்டுக்கு போயிட்டுவான்னு ஏதாவது உதவியை நிறுத்த போறான். தத்தளிக்க போவது உண்மையாக போலியோ மக்களுக்கு உதவி கொண்டிருக்கும் சமூக ஆர்வம் கொண்ட சாதாரண மக்கள் தான். 
போலியோ ஒழிச்சாசாம் போய் சொட்டு மருந்து போடுங்க .
>>
கீழ்க்கண்ட மூன்றும் வெவ்வேறு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Control : நோய் பரவாமல் கட்டுப்பாடு
Elimination : நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகளை நீக்கி விடுதல்
Eradication : வேருடன் அழித்தல் அல்லது அடியோடு நீக்குதல் 
தற்பொழுதைய நிலை 
India marks three years since last polio case
என்று தான் கூறியுள்ளார்கள்
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் wild polio virus மூலம் ஏற்படும் paralytic polio இல்லை என்று தான் கூறியுள்ளார்கள் 
India has marked three years since its last polio case was reported, a major milestone in eradicating the disease.
சொல்லப்போனால் Country hopes to be declared polio-free by March after rolling out vaccination scheme and strict border checks
அதாவது போலியோ அற்ற நிலை - polio free- கூட வரவில்லை . அதற்கு பிறகு தான் elimination எல்லாம் 
wild polio virus மூலம் ஏற்படும் பாதிப்புகள் கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லை. ஆனால் wild polio virus நம்மை சுற்றி இருந்து கொண்டு தான் இருக்கிறது 
அது முற்றிலும் நீக்கப்பட மேலும் சில ஆண்டுகள் ஆகும் 
வரை போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்
--
//
டாக்டர், முதலில் ஒரு விஷயம். போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை ஏன் என்று கேட்கவில்லை. இன்று இத்தனை பெரிய அளவில் அது கொடுக்கப்படுவதற்கான அவசியத்தை அறிய விரும்புகிறேன்.
//
மேடம் 
தடுப்பு மருந்துகள் அளிப்பதில் பல நடைமுறைகள் உள்ளன 
அதில் ஒன்று : வயது அடிப்படையில் (பிறந்த தேதியின் அடிப்படையில்)
மற்றொரு வகை : தேவையின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் குறிப்பிட்ட வயதுடைய நபர்கள் அனைவருக்கும் அளிப்பது 
-oOo-
அனைத்து தடுப்பு மருந்துகளும் பிறந்த தேதியின் அடிப்படையில் (வயது அடிப்படையில்) வழங்கப்படுகின்றன 
இதற்கான பட்டியல் 
BCG & Zero Polio At birth or within 15 days Intra dermal - BCG Oral - OPV
DPT , Hep.B & OPV 6th week
10th week
14th week Intra muscular –DPT , Hep.B Oral – OPV
MEASLES 9th month (after completion of 270 days) Subcutaneous
DPT booster & OPV 16-24 months Intra muscular - DPT Oral - OPV
DT 5 Year Intra muscular
TT Preg. Mother - 2 doses With one month interval.10 & 16 year Children - 1 dose Intra muscular
மேலே உள்ளதை படித்தால், போலியோ தடுப்பு மருந்து இப்படியும் வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் அறியலாம் 
-oOo-
இது தவிர மற்றொரு முறை : தேவையின் அடிப்படையில் : ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் குறிப்பிட்ட வயதுடைய நபர்கள் அனைவருக்கும் அளிப்பது 
இம்முறைக்கு உதாரணங்கள் என்றால்
1. பல்ஸ் போலியோ : 17/01/2016 அன்று 5 இந்தியாவில் உள்ள வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படுவது 
2. சில மாவட்டங்களில் வழங்கப்படும் யானைக்கால் நோய் எதிர்ப்பு மருந்து 
3. வெள்ளம் அல்லது இயற்கை பேரிடரின் போது வழங்கப்படும் தடுப்பு மருந்துகள் 
-oOo-
போலியோ தடுப்பு மருந்தானது
வயதின் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது
தேவையின் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது (இந்தியா முழுவதும் ஒரே நாளில் மொத்தமாகவும் வழங்கப்படுகிறது) 
-oOo-
//
மேலும், போலியோவுக்கும் மற்ற தடுப்பு மருந்துகளுக்குமான வித்தியாசங்கள் அதன் தமிழ்ப்பெயர்கள் மொழிபெயர்ப்பின் சரித்தன்மை குறித்தும் என் கேள்வியில்லை. ஆனால், மற்ற மருந்துகள் கொள்ளை விலை வைத்து விற்கப்படும்போது, போலியோ போலவே அரசு மற்ற தடுப்பூசிகளுக்கான முகாம்களை ஏன் நடத்தக்கூடாது.
//
மேலே உள்ள அனைத்து மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கின்றன
அவை வயதின் அடிப்படையில் வழங்கப்படுவதாம் முகாம் நடத்தப்படுவதில்லை 
//
அது வாய் வழி பரவும் அல்லது காற்றில் பரவும் நோயாகவே இருக்கட்டும்.
//
வாய் வழியே பரவும் நோய்களுக்குத்தான் Pulse Immunization தேவை
இது தேவையின் அடிப்படையில் 
//
போலியோ ஒரே நாளில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அறிந்ததுதான்,
//
அதே அதே
இது தேவையின் அடிப்படையில் 
//
ஆனாலும் பிறந்த குழந்தைகளுக்கு அந்த மருத்துவமனையிலேயே போலியோ கொடுக்கப்பட்டுத்தான் வருகிறது.
//
அது வயதின் அடிப்படையில் வழங்கப்படுவது 
//
உலகில் உள்ள அத்தனைக் குழந்தைகளும் ஒரே நாளில் பிறப்பதில்லை /என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.
//
கண்டிப்பாக இல்லை
எனவே தான் அவர்களூக்கு வயதின் அடிப்படையில் மருத்துவமனையிலும்
தேவையின் அடிப்படையில் pulse polio விலும் வழங்கப்படுகிறது 
//
கடைசியாக, ஒரு பதிவில் நீங்கள் சொல்ல விரும்பும் விஷயங்களை சுருங்கச் சொன்னால் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
//
மேடம்
முதலில் சுருங்கத்தான் சொன்னேன்
உங்களுக்கு மேலும் சந்தேகங்கள் இருந்ததால் விரிவாக சொல்ல வேண்டியதாகி விட்டது 
//
இத்தனை லிங்குகள் கூகுளிலேயே கிடைக்கின்றன.
//
இருந்தும் உங்கள் சந்தேகம் தீரவில்லையல்லவா
அதனால் தான் விரிவாக சொல்லியுள்ளேன் 
வேறு சந்தேகம் இருந்தால் கேட்கவும்

P Suresh Kumar
போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்குவொம் என்ற வாசகம் இப்போது போலியோ இல்லாத உலகத்தை உருவாக்குவோம் என்று மாறி இருக்கிறது.  ‪#‎அடுத்த‬ கட்டம் அடுத்தடுத்த கட்டம்.., வாழ்த்துக்கள் பாய்ஸ்..,
இன்றைய தினம் தமிழ்நாட்டில் பெரும்பகுதியினர் குளிருக்காக இழுத்துப் போர்த்திக்கொண்டும் ஸ்வெட்டர் முதலான பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து கொண்டும் வீட்டினுள்ளே இருக்கின்றனர். இந்த நிலையிலும் தமிழகத்தில் ஒரு குழுவினர் காலை ஐந்து மணி அல்லது அதற்கு முன்னரே தங்கள் தலைமை அலுவகத்திற்கு சென்று தங்களுக்குத் தேவையான உபகரணங்களை எடுத்துக் கொண்டு தாங்கள் பணியாற்றும் இடத்திற்கு சென்று ஏழுமணிக்கெல்லாம் தங்கள் பணியைத் துவங்கி விட்டனர். மாலை ஐந்து மணிவரை அதே இடம்தான் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அவர்கள்தான் போலியோ சொட்டு மருந்து குழுவினர். அதில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் பணீயாளர்கள் இருப்பார்கள், தன்னார்வ தொண்டர்களும் இருப்பார்கள். முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய குழுவினர் அவர்கள். தங்கள் குழந்தைகளுக்கும் யாராவத் கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் களப் பணி ஆற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தமிழகத்தின் மிக உயரத்திலும் மிகக் குளிரான பகுதியிலும் காலை ஏழுமணிக்கே சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து கொண்டிருக்கும் நண்பர் Arul Kumar அவர்களுக்கு பாராட்டுக்கள்.


No comments:

Post a Comment